ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

95 0

ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார் டீம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளதுஇந்த நிலையில் தனது கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படத்தை அறிவித்த விஜய் அதன் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்அந்த வகையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு சார்பாக வழக்கு தொடரப்பட்டதுஇந்த வழக்கில் தணிக்கை சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்உடனடியாக தணிக்கை துறை மேல்முறையீடு செய்ததுஇதனால் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை குழு- விஜய் அறிக்கை

இதன் காரணமாக விஜய் மட்டுமில்லாமல்அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்காக தவெக தொண்டர்கள் காத்திருந்த நிலையில்அதனை விடுங்கப்பாதேர்தல் பணியை பார்க்கலாம் என்ற வகையில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்இது தொடர்பாக வெளியிடப்படுடள்ள அறிக்கையில்தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு. தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள். விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள். மருத்துவர்கள். செவிலியர்கள். மகளிர் அமைப்புகள். இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழு விவரம்:

1.திரு. Dr. K.G. அருண்ராஜ்

2. . J.C.D. பிரபாகர்

3. திருA. ராஜ்மோகன்

4.  T.S.K. மயூரி

5. பேராசிரியர்.Aசம்பத்குமார்

6. M.அருள் பிரகாசம்

7. விஜய் R. பரணிபாலாஜி

8. . முகமது பர்வேஷ்

9. . T.K பிரபு

10. K. கிறிஸ்டி பிருத்வி

11.  M.K. தேன்மொழி பிரசன்னா

12. வழக்கறிஞர் சத்யகுமார்

மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடுஅந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிவிப்பில் விஜய் குறிப்பிட்டுள்ளார்..

Related Post

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

Posted by - July 18, 2025 0
பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வாக்குரிமை: திருமாவளவன் எச்சரிக்கை! ஸ்டாலின் நடவடிக்கை தேவை!

Posted by - August 2, 2025 0
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் – திருமாவளவன் விழுப்புரம்: வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின அரசியல் தலைவர்களாக…

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

Posted by - October 17, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற…

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *