ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன – தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

233 0

தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில அவர் கூறியதாவது:  தொடர்ந்து புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் யாரும் சிறை வைக்கபடவில்லை. இதுகுறித்து வாக்காளர்களிடம் விசாரணை நடத்தினோம்.  ஆனால் தாங்களாகவேதான் சென்றோம் என தெரிவித்ததாக சொல்கிறார்கள்.இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நேற்று கூட தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் குறித்துதான் வீடியோ  கான்பிரஸ் மீட்டிங் நடந்தது, விதிமுறைகள் மீறியது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 48.6 லட்சம் ரூபாய் வரை பணம் பிடிக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.

Related Post

கறார் காட்டும் பசுமை தீர்ப்பாயம்.. நைசாக நழுவும் சிபிசிஎல்! எண்ணெய் கழிவு வழக்கு இன்று விசாரணை

Posted by - December 14, 2023 0
சென்னை: மிக்ஜாம் மழை வெள்ளத்தின் போது, வடசென்னையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறி கடலில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது…

520 கிமீ தூரம்.. 12கிமீ வேகம்.. நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

Posted by - December 8, 2022 0
Cyclone Mandous | டெல்டா மற்றும் கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *