கறார் காட்டும் பசுமை தீர்ப்பாயம்.. நைசாக நழுவும் சிபிசிஎல்! எண்ணெய் கழிவு வழக்கு இன்று விசாரணை

250 0

சென்னை:

மிக்ஜாம் மழை வெள்ளத்தின் போது, வடசென்னையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறி கடலில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடங்குகிறது.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.கறார் காட்டும் பசுமை தீர்ப்பாயம்.. நைசாக நழுவும் சிபிசிஎல்! எண்ணெய் கழிவு  வழக்கு இன்று விசாரணை | The case related to the mixing of crude oil waste in  the sea will be heard ...
ஆனால் வட சென்னையின் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. காரணம் வெள்ளம் வந்தபோது அத்துடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகள்தான். மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், கச்சா எண்ணெய் கழிவுகளும் வீடுகளை சூழ்ந்தன. இதன் காரணமாக மூச்சுத்திணறல், தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்ததையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு கடந்த 9ம் தேதி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

“எண்ணெய் கசிவு நடந்து 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தி அளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா?” என்று கேள்வியெழுப்பி, கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழக அரசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தொடங்கியது. ஆனால் இந்த பணியில் மனித உரிமை மீறல் ஏற்பட்டிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம்சாட்டியது.

இதனையடுத்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டன. கழிவை அகற்ற பூமர் எனும் அதிநவீன இயந்திரமும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த கழிவு காரணமாக 5,852 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதியுடன் கூடுதல் நிதியை வழங்கவும் சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. அதாவது எண்ணெய் கசிவுக்க காரணமாக நிறுவனங்களிடமிருந்து தொகையை பெற்று அதனை பிரித்து கொடுக்க திட்டமிட்டிருக்கிறது.

ஆனால் சிபிசிஎல் நிறுவனம், எண்ணெய் கசிவு குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் வருகிறது.

Related Post

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

Posted by - October 28, 2024 0
தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார். தமிழக…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?

Posted by - March 5, 2025 0
இன்றை அனைத்துக் கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரயறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அனைத்துக் கட்சி கூட்டம்: சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *