பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மகளிர் வங்கி கணக்கில் ரூ.5000
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப தமிழக மக்களுக்கு கொத்து கொத்தாக வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கண் விழித்ததும் தமிழக மகளிர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் வங்கி கணக்கில் 5ஆயிரம் ரூபாய் வந்திருப்பதை கண்டு குஷியில் கொண்டாடி வருகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் மகளிர் உரிமை தொகையாக 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் 5ஆயிரம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு என குறிப்பிட்டுள்ளார்.
- பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
- 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும்_தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என தெரிவித்துள்ளவர், இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.