🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

47 0

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரது 9.30 மணியளவில், பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, 2026-27 நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட் – துறை வாரியான நிதி ஒதுக்கீடு

  • பள்ளிக் கல்வித்துறை – ரூ.48,534 கோடி
  • உயர்கல்வித்துறை – ரூ.8,505 கோடி
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ.1,471 கோடி
  • சிறப்பு திட்ட செயலாக்க துறை – ரூ.17,088 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை – ரூ. 718 கோடி
  • ஊரக வளர்ச்சித்துறை – ரூ.28,687 கோடி
  • நகப்புற வளர்ச்சித்துறை – ரூ.28,827 கோடி
  • நதிகள் மேம்பாட்டு திட்டம் – ரூ.374 கோடி
  • தொழிலாளர் நலத்துறை – ரூ.1,996 கோடி
  • 41 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழா – ரூ.43 கோடி
  • மருத்துவத்துறை – ரூ.22,090 கோடி
  • கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.8,911 கோடி நிதி ஒதுக்கீடு
  • செமி கண்டக்டர் இயக்கம் செயல்திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.500 நிதி ஒதுக்கீடு
  • தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகதுறைக்கு ரூ.4,882 கோடி நிதி ஒதுக்கீடு
  • தகவல் தொழில்நுட்பத்துறை – ரூ.219 கோடி
  • நீர்வளத்துறை – 10,076 கோடி
  • மின்சாரத்துறை – ரூ.18,091 கோடி
  • கூட்டு குடிநீர் திட்டம் – ரூ.809 கோடி
  • அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ரூ.6000 கோடி
  • போக்குவரத்து துறை – 13,062 கோடி
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை – ரூ.1,943 கோடி
  • நெடுஞ்சாலை, சிறுமுகங்கள் துறை – ரூ.21,132 கோடி
  • ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை – ரூ.3934 கோடி
  • மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.4000 கோடி

Related Post

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - February 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *