அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

62 0

அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளார்.

தனது அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டுள்ளார் முன்னாள் முதலமைச்சரும், ஜெயலலிதாவின்  தீவிர விசுவாசியாக கருதப்படுபவருமான ஓ. பன்னீர்செல்வம். அதிமுக மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும், அது முடியாமல் போனதால், தற்போது அதிரடியாக ஒரு முடிவை அவர் எடுத்துள்ளது போல தெரிகிறது. ஆம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்திய அவர், மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாக பேட்டி அளித்துள்ளார். இதனால், அவர் திமுகவில் இணைய உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவரது பேட்டி குறித்து இப்போது பார்ப்போம்.

பேரவையில் அச்சாரம் போட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று பேரவையில் பேசிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுக எம்எல்ஏ ஐய்யப்பன், வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும்  வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்று கூறினார்.

மேலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சித் தலைவி அம்மா ஆசியோடும், மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்று அவரை வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் திமுக ஆட்சி என்று அதிரடியாக பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னிர்செல்வம் பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். அதைத் தொடர்ந்து அவர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, 5 ஆண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், அதற்காக வாழ்த்து தெரிவிக்கவே காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும், திமுக-வின் 5 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் தமிழகத்தில் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

அதோடு, எம்எல்ஏ ஐய்யப்பன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் நினைப்பதைத் தான் தனது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசினார் என தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுக-வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். இதனால், அவர் திமுகவில் இணைய உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியலில் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்படும் ஓ. பன்னிர்செல்வம், அவராலேயே முதலமைச்சர் ஆக்கப்பட்டவர். 3 முறை முதலமைச்சராக இருந்த அவர், ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு அதிமுகவிலிருந்து தூக்கி வீசப்பட்டார். தர்ம யுத்தம் எல்லாம் நடத்தி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், எவ்வளவோ முயன்றும் இன்று வரை மீண்டும் அதிமுகவில் இணைய முடியவில்லை.

மறுபுறம், தனி கட்சி தொடங்காமல், உரிமை மீட்புக் குழு என்று ஒன்றை அமைத்து போராடி வந்தார். ஆனால் அவருக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான். அவரிடம் இருந்த ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக பிய்த்துக் கொண்டு பல்வேறு இடங்களில் ஐக்கியமாகி விட்டனர். அவரிடம் மிஞ்சியிருப்பது இந்த எம்எல்ஏ ஐயப்பன் ஒருவர் தான்.

இப்படி எந்த பக்கமும் போக முடியாமல் தனித்து விடப்பட்டதாலேயே, திமுகவில் இணையும் அதிரடி முடிவை அவர் எடுத்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும் என்று நம்புவோம்.

 

Related Post

தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.!

Posted by - January 2, 2026 0
தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு…

தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Posted by - October 18, 2025 0
வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. தீபாவளி திங்களன்று…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *