கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

86 0

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியதை இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “தயவு செய்து எங்கள் கட்சிக்கு யாரும் ஒட்டு போட வேண்டாம்.. உலகத்தில் முதல் முறையாக ஒரு கட்சி தலைவர் தன் கட்சி தொண்டர்களிடம் கெஞ்சி கோரிக்கை.. ஊரெல்லாம் கட்ட பஞ்சாயத்து பண்ண கட்சி இன்று கர்மா அதையே அவர்களுக்கு திருப்பி தருகிறது. பாதிக்கப்பட்ட பெத்தவங்க பாவம் சும்மா விடுமா. Karma Is boomerang” என தெரிவித்துள்ளார். இதற்கு விசிக தொண்டர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

நடந்தது என்ன?

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக அங்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் மிகுந்த சிக்கல் நீடித்தது.

இதனால் தனக்கு செல்வாக்கு உள்ள நான்கு தொகுதிகளில் தனித்து களம் காண்பதாக கூறி திருமாவளவன் வேட்பாளர்களை அறிவித்தார். இதற்கிடையில் திமுக – காங்கிரஸ் இடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்தக் கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் அதனை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடும் உழவர்களை தொகுதியில் மட்டும் விசிக தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே சமயம் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். அவர்களுக்கு பதில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையை உழவர்கரை தொகுதியில் சார்பில் செல்வ புஷ்பலதா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு சுயேட்சை சின்னமான கரும்பலகை ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் கேட்டுக் கொண்டது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…

மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

Posted by - February 24, 2026 0
ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ். கட்சி விதியை…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *