70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்!

89 0

அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக தங்களிடம் 70 தொகுதிகளை ஒப்படைக்குமாறும், தாங்களே தொகுதிகளை பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு ஒப்படைக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக ஒரு பக்கம் தொகுதிப் பங்கீட்டை முடித்து வரும் நிலையில், அதிமுக இன்னும் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.

நெருக்கடி தரும் பாஜக:

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆளுமைகளில் இருந்த அதிமுக 2வது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, தமாக, பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த தேர்தலில் பாஜக அதிமுக-வுடனான கூட்டணியில் இருந்தாலும், முக்கிய முடிவுகளை அதிமுக-வை எடுக்க விடாமல் பல நெருக்கடிகளை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் பிரதமர் மோடி வந்த தினத்தில் அவரை வரவேற்பதற்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பியூஷ் கோயல், அதிமுக முயற்சியால் பாமக மட்டுமே கூட்டணிக்குள் வந்துள்ளது. அமமுக, தமாக, ஐஜேகே, தமமுக ஆகிய கட்சிகளை பாஜக-தான் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.

70 தொகுதிகள்:

இதனால், 70 தொகுதிகளை மொத்தமாக பாஜக-விடம் கொடுத்துவிடுங்கள், எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்டு? என்பதை நாங்கள் நிர்ணயித்து பிரித்துக் கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பியூஷ் கோயலின் இந்த பேச்சுவார்த்தையால் எடப்பாடி பழனிசாமி கடும் கோபம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, பியூஷ் கோயலிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி பாஜக-விற்கு 25 தொகுதிகள் அளிக்கிறோம்  என்றும், மற்ற கட்சிகளுக்கு தேவையான பங்கீட்டை நாங்களே பிரித்துக் கொடுக்கிறோம் என்று கறார் காட்டியுள்ளார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி கூறி தொகுதிகள் ஒதுக்கீட்டில் பியூஷ் கோயல் திருப்தி அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியில் அதிமுக பாஜக-வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் இருந்து வரும் நிலையில், தொகுதி ஒதுக்கீட்டு முடிவில் அவர்களை முடிவு எடுக்க அனுமதிப்பது, பாஜக-விற்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவது அதிமுக-வின் எதிர்காலத்தை மிகுந்த கேள்விக்குறியாக்கி விடும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக தொகுதி கேட்கும் பாஜக:

பாஜக-வினர் கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 11.7 சதவீதம் வாக்குகள் பெற்றதால் இந்த தேர்தலில் அதற்கு ஏற்ப தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக, ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் நாம் தமிழர், முதன்முறையிலே ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் தவெக என பல முனைப் போட்டிகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியான அதிமுக களத்தில் இறங்கியுள்ளது. பாஜக தங்களுக்கு 35 தொகுதிகளை குறைந்தது ஒதுக்க வேண்டும் என்று அதிமுக-விற்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.

Related Post

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ – டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு

Posted by - July 23, 2025 0
டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல, அந்த கோட்டை எல்லாம் தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டதாக தஞ்சையில் பேசிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *