எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

117 0

ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று ஜனநாயகக் கட்சியினரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஈரான் அணு ஆயுதத்தையும் ஏவுகணைகளையும் தயாரிப்பதைத் தடுப்பதுதான் நோக்கம் என டிரம்ப் அளித்திருக்கும் விளக்கமும் பலவீனமானது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இயற்கை யுரேனியத்துக்கு நிகராக நீர்த்துப்போகவைக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதான முயற்சியில் ஈடுபட்ட ஓமன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

உச்சத் தலைவரையே இழந்துவிட்ட நிலையில், கட்டுப்பாடற்ற நிலைக்குச் சென்றிருக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது மட்டுமல்லாமல் ஹோட்டல்கள், தூதரகங்கள் உள்ளிட்ட பிற கட்டிடங்களையும் தாக்கிவருகிறது; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான முதன்மை வழியான ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி பயங்கரவாத அமைப்பு செங்கடல் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கிறது. செங்கடல் வழியாக இந்தியாவின் 50% ஏற்றுமதி நடந்துவருகிறது; கச்சா எண்ணெய், புதைபடிவ எரிபொருள்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருள்கள் செங்கடல் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. ஏராளமான விமானங்கள் ரத்து, வான் எல்லை மூடல் என மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகி இருக்கிறது. காமேனி யதேச்சதிகார ஆட்சியை நடத்தியவர் என்கிற விமர்சனங்கள் இருந்தாலும், அவரது மறைவால் ஈரானில் சமூக அளவில் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாது. மறுபுறம், போர்களுக்கு முடிவுகட்டுவதாகப் பேசிவந்த டிரம்ப் அதற்கு முரணாகச் செயல்படுகிறார்.

வெனிசுலா, ஈரானைத் தொடர்ந்து கியூபா மீதும் டிரம்ப் கண்வைத்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து, லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.

சீனா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற சில நாடுகளே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்திருக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் இப்பிரச்சினை தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போர்கள் அழிவைத் தவிர வேறு எந்த நன்மையையும் மனிதகுலத்துக்குத் தராது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

சீனா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற சில நாடுகளே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்திருக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் இப்பிரச்சினை தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போர்கள் அழிவைத் தவிர வேறு எந்த நன்மையையும் மனிதகுலத்துக்குத் தராது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

Related Post

2 கருப்பைகள் கொண்ட பெண்: இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்

Posted by - November 18, 2023 0
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப்…

மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

Posted by - November 22, 2025 0
தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள்…

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. “பச்சையா” ஆமாம்னு பதில் சொன்ன Gemini AI.. மோடியிடம் மன்னிப்பு கேட்ட Google!

Posted by - March 7, 2024 0
இந்திய பிரதமர் மோடி (PM Modi) பற்றிய கேள்விக்கு “ஆமாம்” அவர் அப்படிப்பட்ட ஆளுதான் என்று பதில் கூறியதன் விளைவாக.. கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ…

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

Posted by - January 6, 2024 0
வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது.…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *