தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

106 0

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்​களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் தலை​மையி​லான தேர்​தல் ஆணை​யர்​கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.

இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக – பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.

Related Post

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…

டெல்லி செல்வது எதற்காக.? நாளை முக்கிய அறிவிப்பு உண்டா.? செங்கோட்டையன் பதில் இதுதான்

Posted by - September 8, 2025 0
டெல்லி பயணத்திற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது பயணம் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு உள்ளதா என்பதற்கும் என்ன…

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *