TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?

99 0

டிவிஎஸ் தனது புதிய இ ஸ்கூட்டர் TVS Orbiter 1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரிக்கு சந்தா செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற மின்சார ஸ்கூட்டர்கள் மின்சார வாகன உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

Orbiter V1:

இந்த நிலையில், டிவிஸ் நிறுவனம் நேற்று சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள புதிய இ ஸ்கூட்டர் Orbiter V1. இந்த இ ஸ்கூட்டர் 1.8 கிலோவோட் பேட்டரி கொண்டது. இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 86 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். Orbiter V2 இ ஸ்கூட்டரில் 3.1 கிலோவாட் பேட்டரி கொண்டது. இதை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.

விலை எப்படி?

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 86 ஆயிரம் ஆகும். அதேசமயம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் ( BaaS) என்ற திட்டத்தின் கீழ் பேட்டரிக்கான விலையை முழுமையாக செலுத்தாமல் பேட்டரி பயன்பாட்டிற்கு மட்டும் சந்தா செலுத்தலாம். இந்த திட்டத்தின் கீழ் இந்த புதிய இ ஸ்கூட்டரை 49 ஆயிரத்து 999 மட்டுமே செலுத்தி வாங்கலாம். இந்த திட்டம் மாதந்தோறும் ரூபாய் 862 மூலம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் 24 மாதங்கள், 36 மாதங்கள்  மற்றும் 60 மாதங்கள் வரை செலுத்தலாம்.

சிறப்புகள்:

14 இன்ச் சக்கரங்கள் முன்பக்கம், 12 இன்ச் சக்கரங்கள் பின்பக்கம்  உள்ளது. எல்சிடி கிளஸ்டர், மொபைல் ஆஃப், ஜிபிஎஸ் நேவிகேஷன், பாதுகாப்பு அம்சங்கள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. 34 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.

இந்த ஸ்கூட்டர் 2 வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. சாம்பல் மற்றும் வெள்ளி நிறத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் தினசரி நகரப் பயன்பாட்டிற்கு இந்த இ ஸ்கூட்டர் பயன்படுத்துவதற்கு சிறப்பானதாக அமையும் என்று கருதப்படுகிறது.

Related Post

இனி பாதி நாளுக்கு பணம் கொடுத்தா போதும்.. 20 Vodafone திட்டங்களில் அதிரடி மாற்றம்.. ஆடிப்போன Jio, Airtel, BSNL!

Posted by - December 9, 2024 0
வோடாபோன் ஐடியா (Vodafone Idea) அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான “ஹீரோ பேக்குகள்” (Hero…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

இரக்கமின்றி பிஞ்சு மகனை பெண் தொழில் அதிபர் கொன்றது எப்படி?: போலீஸ் வெளியிட்ட திடுக் தகவல்கள்

Posted by - January 11, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்கள் இருவரும்…

கொரோனா அச்சம் – மீண்டும் வருகிறது வொர்க் ப்ரம் ஹோம்…!

Posted by - December 28, 2022 0
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *