வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

67 0

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், எதிர்கட்சியான அதிமுக தொகுதி பங்கீட்டில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை வீழ்த்தும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. பாஜக, பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைத்துள்ளது. அந்த கட்சிகளோடு கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, சிறிய கட்சிகளை இரட்லை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பதா.? அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதா.? என பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஒரு சில இழுபறி ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியது.

அந்த வகையில் இன்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதற்காக கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொருப்பாளருமான பியூஸ் கோயல் தமிழகம் வர இருந்தது ஆனால் பேச்சுவார்த்தை முடிவடையாத காரணத்தால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியதையடுத்து, இன்று காலை சென்னை வந்தார் பியூஸ் கோயல். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற தொகுப் பங்கீட்டு உடன்பாட்டிற்காக கூட்டத்தில் அவர் பங்கேற்ற நிலையில், பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பட்டியல்

பாஜகவுக்கு 27 தொகுதிகள்.

பாமகவுக்கு 18 தொகுதிகள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகள்.

மற்ற கட்சிகளுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும். இன்று இரவு மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை வெளியிடப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

 

Related Post

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? – கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை

Posted by - July 23, 2025 0
  #Seeman #NaamThamizha Katchi #ADMK #TNAssemblyElection #சீமான் #நாம்தமிழர்கட்சி #அதிமுக #எடப்பாடிபழனிசாமி #தமிழகசட்டசபைதேர்தல் 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும்…

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *