அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? – கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை

213 0

 

#Seeman #NaamThamizha Katchi #ADMK #TNAssemblyElection #சீமான் #நாம்தமிழர்கட்சி #அதிமுக #எடப்பாடிபழனிசாமி #தமிழகசட்டசபைதேர்தல்

  • 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார்.
  • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இது தொடர்பாக அவர் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டே உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கூட்டணி அழைப்பு பற்றி சீமானிடம் இதற்கு முன்பு நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது என்றே கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சீமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது போல தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பு பற்றி கடந்த 2 நாட்களாக கருத்து தெரிவித்து வரும் சீமான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் சீமான் தனித்து போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் சீமான் கூட்டணி அமைத்தால் அது நிச்சயம் அ.தி.மு.க. அணிக்கு பலமாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

திமுகவின் மெகா பிளான்…

Posted by - December 17, 2025 0
கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பாஜக…

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

Posted by - December 15, 2025 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *