”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

125 0

Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக, சீமான் விமர்சித்துள்ளார்.

விஜய் மீது சீமான் அட்டாக்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அப்போது ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசுகையில், “திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து பேசினார். இறுதியாக விஜயையும், அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். அதன்படி சீமான் பேசுகையில், “நீங்கள் கூட்டத்தை பார்க்கிறீர்கள் அது கூடும், கலையும். ஆனால் என் கூட்டம் கூடும் ஆனால் கலையாது. ஏனென்றால் நான் கட்டுவது கொள்கை கோட்டை. குட்டிச்சுவர் அல்ல. ஒரு வழக்கு போட்டதும் யார் எங்கு? சென்றார்கள் என்றே தெரியவில்லை. கட்சியே தலைமறைவாகிவிட்டது. 260 வழக்குகள் போட்ட பிறகும் இன்றும் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.

விஜயின் வாக்குறுதியை விமர்சித்த சீமான்

தயவு செய்து என்னை கைது செய்யுங்கள் என இந்திய மண்ணில் கெஞ்சும் ஒரே தலைவன் நான் மட்டும் தான். சிவானின் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், சீமானின் ஆட்டத்தை இந்த முறை களத்தில் காண்பீர்கள். இவனை மாதிரி பிக்காலி பயனா நான். மோட்டர் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என்கிறார்கள். பெட்ரோல் யார் தருவான்?  வீட்டுக்கு ஒரு கார் தருவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு, அம்பேத்கர் புகைப்படத்தை அனுப்புவேன். கேட்டால் உலகிலேயே சிறந்த கார் அம்பேத்கர் என நான் நகைச்சுவையாக சொன்னதை இவர்கள் உண்மையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சோறு இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்க கார் தருகிறார்களாம்.  நான் ஆட்சி அமைப்பேன். இல்லையென்றால் நான் இல்லாமல் எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது” என சீமான் சூளுரைத்துள்ளார்.

சீமானை கண்டுகொள்ளாத விஜய்:

விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்ததும், முதல் ஆளாக சீமான் ஆதரவு தெரிவித்தார். ஆனால், தமிழ் தேசியத்திற்கு மாறாக திராவிட கொள்கைகளை பின்புலமாக கொண்டு செயல்பட உள்ளதாக விஜய் அறிவித்தது முதலே, சீமான் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார். விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து கொண்டுள்ளார். அந்தவகையில் தான் அண்மையில் காஞ்சிபுரத்தில் பேசும்போது, வீட்டிற்கு ஒரு பைக் நிச்சயம், கார் லட்சியம் என விஜய் பேசியிருந்தார். அதனை தற்போது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனாலும், சீமானின் விமர்சனங்களை கண்டுகொள்ளாத விஜய், திமுகவை நோக்கி மட்டுமே கேள்விகளை எழுப்பி வருகிறார்.

Related Post

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

இன்று நெல்லை வரும் அமித்ஷா.. நயினார் வீட்டில் விருந்து..! விஜய்க்கு எதிராக வியூகம் வகுப்பாரா?

Posted by - August 22, 2025 0
திருநெல்வேலியில் இன்று நடக்கும் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா இன்று வருகிறார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான…

திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

Posted by - July 5, 2025 0
சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில…

சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்

Posted by - August 20, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இத்தனை கால அரசியல் அனுபவங்களை வைத்து, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சைலென்ட்டாக, அதே நேரத்தில் பக்காவாக செய்து…

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *