ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் கைது..

88 0

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு சங்​கரை சென்னை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கர் மீது ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் 2 மோசடி வழக்​கு​களைப் பதிவுசெய்து கடந்த டிச.13 அன்று கைது செய்​தனர். அவருக்கு உடல்​நலப் பிரச்​சினை​கள் இருப்​ப​தால் ஜாமீனில் விடுவிக்​கக்​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​யிருந்​தது.

மார்ச் 25-க்​குப் பிறகு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்​டிய சவுக்கு சங்​கர் தலைமறை​வா​னார். இந்​நிலை​யில் சவுக்கு சங்​கர் தன் மீதான 2 வழக்​கு​களை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று முன்​தினம் நடந்​தது.

அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், சவுக்கு சங்​கர் தொடர்ந்து தலைமறை​வாக இருந்து வரு​வ​தால் அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து சென்னை போலீ​ஸார் தேடி வரு​வ​தாக தெரி​வித்​தார். மேலும் சிபிஐ விசா​ரணை கோரும் 2 வழக்​கு​களி​லும் ஏற்​கெனவே விசா​ரணை முடிக்​கப்​பட்டு குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக​வும் தெரி​வித்​தார். அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசா​ரணையை வரும் ஏப்​.27-க்கு தள்​ளி​வைத்து உத்​தர​விட்​டுள்​ளார்.இது ஒரு​புறம் இருக்க தலைமறை​வான சவுக்கு சங்​கரை தனிப்​படை அமைத்து சென்னை போலீ​ஸார் தேடி வந்​தனர். இந்​நிலை​யில், அவர் ஆந்​திர மாநிலத்​தில் உள்ள லாட்ஜ் ஒன்​றில் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்று அங்கு விரைந்த சென்னை போலீ​ஸார் சவுக்கு சங்​கரை கைது செய்​தனர். அவருடன் தங்​கி​யிருந்த அவரது தோழி மால​தி​யும் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் இரு​வரை​யும் போலீ​ஸார் சென்னை அழைத்து வந்​தனர். மாலதி மீதும் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Post

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - July 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025 0
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த…

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - March 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…

சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

Posted by - November 13, 2025 0
தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *