சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

103 0

சென்னை: தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர்.

சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

அவரை ஜாமீனில் விடுவிக்​கக் ​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது. அன்​றைய​தினம் அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத​தால், அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து போலீ​ஸார் தேடி வந்​தனர்.

பின்​னர் ஆந்​தி​ரா​வில் சவுக்கு சங்​கர் கடந்த வாரம் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் மீது குண்​டர் தடுப்பு சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே உடல்​நலக்​குறைவு காரண​மாக, சவுக்கு சங்​கரின் தாயார் கமலா நேற்று முன்​தினம் கால​மா​னார். பெங்​களூரு வில்​சன் கார்​டன் மின் மயானத்​தில் நேற்று நடை​பெற இருந்த தயாரின் இறு​திச் சடங்​கில், பங்​கேற்க சவுக்கு சங்​கருக்கு ஏப்​.13 இரவு 8 மணி முதல் ஏப்​.16 இரவு 8 மணி வரை பரோல் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து தாயார் கமலா​வின் இறு​திச் சடங்​கில் சவுக்கு சங்​கர் கலந்து கொண்​டார். சவுக்கு சங்​கரின் தாயார் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: யூடியூபர் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா உடல்​நலக்​ குறை​வால் கால​மான செய்​தி​யறிந்து மிகுந்த துயருற்​றேன்.

தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்​துக்​காக, காவல் ​துறை​யால், திமுக மற்​றும் கூட்​டணி கட்சி குண்​டர்​களால் அவர் சந்​தித்த துயரங்​கள் ஏராளம். தாயை இழந்து வாடும் சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்​கள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சவுக்கு சங்​கரின் தாயார் மறைவு செய்​தி​கேட்டு வருத்​தம் அடைந்​தேன். இந்த கடின நேரத்​தில் சவுக்கு சங்​கரின் குடும்​பத்​தினருக்கு என் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்​கரின் தாயார் கால​மான செய்தி வருத்​தத்​தை​ அளிக்​கிறது. சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: சவுக்கு சங்​கரின் தா​யார் மறைந்த செய்​தி​யறிந்து ஆழ்ந்த மனத்​துயர் அடைந்​தேன். சவுக்கு சங்​கருக்கு எனது ஆறு​தலை தெரி​வித்​துக் கொள்கிறேன்.

Related Post

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

Posted by - November 30, 2023 0
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சினைகள் என்பது குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம். தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு…

ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted by - February 16, 2023 0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Posted by - May 4, 2023 0
காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்படும் அரசியல் முழக்கமே திராவிட மாடல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும்

Posted by - November 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

சட்ட விரோத பண பரிமாற்ற புகார்.. தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கியது யார்?

Posted by - September 26, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *