நட்சத்திர தொகுதிகளான பெரம்பூர், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி கிழக்கில் 11 மணி நிலவரப்படி எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவானது விவரம் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், அண்ணாமலை, டிடிவி தினகரன், கனிமொழி மற்றும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ,சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 42.45 சதவீதமும், கொங்கு மண்டலத்தில் 4 மாவட்டங்களில் 40 சதவீதத்தை கடந்துள்ளது. இதில், நட்சத்திர தொகுதிகளான பெரம்பூர், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி கிழக்கில் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவானது விவரம் வெளியாகியுள்ளது.
11 மணி நிலவரம் நட்சத்திர தொகுதி
பெரம்பூர் தொகுதி – 35.26%
கொளத்தூர் தொகுதி – 37.06%
சேப்பாக்கம் – 34.44%
திருச்சி கிழக்கு – 37.24%