வாக்குப்பதிவை 2 மணி நேரம் நீட்டிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்

75 0

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய பேருந்து அல்லது பொது போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் எல்லோரும் தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து ஏற்பாட்டை செய்யும் வகையில் மாநில போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வாக்குப்பதிவு செயல்முறை மிகவும் தாமதமாக இருப்பதாக தகவல். அதை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளின் தேர்தல் மேற்பார்வை அதிகாரி பார்வையிட்டு, விரைவு படுத்த வேண்டும்.

மேலும், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும். இது போக்குவரத்து பிரச்சினையில் சிக்கிய வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும். அந்த வகையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அந்த திருத்தப்பட்ட நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்கினை செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Post

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்!

Posted by - March 4, 2026 0
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக தங்களிடம் 70 தொகுதிகளை ஒப்படைக்குமாறும், தாங்களே தொகுதிகளை பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு ஒப்படைக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *