முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

255 0

நாமக்கல்:

நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு அனுப்பி தர்மபிரபுவாக திகழ்கிறார்.முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல்  கலெக்டரிடம் வழங்கினார் | beggar donated Rs 10 thousand to CM relief fund  gave it to Namakkal ...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

தனது 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி முழு நேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன்.

தற்போது முதலமைச்சர் நிவாரணநிதிக்கு பணம் வழங்குவற்தகாக வந்துள்ளேன். வாழ்க்கையை நடத்த ஓரளவுக்கு பணம் இருந்தால் போதும். மிச்சப்பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்? மிகவும் சிரமப்பட்ட காலத்தில் குடும்பம் நடத்துவதற்காக யாசகம் பெற்றேன்.

தற்போது எனக்காகவும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காகவும் யாசகம் பெற்று அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன் என்றார். பின்னர்தான் கொண்டு வந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாமக்கல் கலெக்டர் ஸ்ரோயா சிங்கிடம் வழங்கினார்.

Related Post

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

Posted by - April 13, 2023 0
சிவகிரி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த…

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை தேநீர்

Posted by - December 11, 2023 0
புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *