சீமான் பேச்சு அநாகரீகமானது அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

239 0

KS Alagiri Press Meet | தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என சீமானுக்கு அழகிரி அறிவுரை

காவல்துறை பாதுகாப்புடன் இருந்துகொண்டு பிற மாநில மக்களுக்கு எதிராக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண வெற்றி விழா மற்றும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு பரப்புரை இயக்க துவக்க விழா நடைபெற்றது. புதிய ரயில் நிலையம் தொடங்கி, பனகல் சாலை வழியாக நடைபெற்ற பேரணியில், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், மேளதாளங்கள் முழங்க கே.எஸ்.அழகிரிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற, காவிரி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஈரோட்டில் காங்கிரஸின் வெற்றி எழுதப்பட்டு விட்டதாகக் கூறினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்வதால் தான் திருப்பூரில் நூல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்று தெரிவித்தார். வட இந்தியர்கள் இல்லையென்றால் திருப்பூரில் தொழிற்சாலைகள் இயங்காது என்றும், அவர்களை தாக்கினால் வடமாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

அருந்ததியர் சமூக மக்கள் தெலுங்கு பேசுவதால் அவர்களை வந்தேறிகள் என்று சீமான் பேசுவதாகவும், பெரியார், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் அவர் இவ்வாறு விமர்சிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Post

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்!

Posted by - October 7, 2025 0
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத்…

“எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் விடாமல்..” – எஃப்ஐஆரில் வெளிவந்த ஞானசேகரனின் கோர முகம்!

Posted by - December 26, 2024 0
பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரியாணி வியாபாரியாக உள்ள ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா…

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

Posted by - April 12, 2024 0
திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்…

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

Posted by - January 8, 2024 0
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *