முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

206 0

சென்னை:

நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள் பே’, ‘போன் பே’ போன்றவற்றின் வழியாக பண பரிமாற்ற செயலி (யு.பி.ஐ.) மூலம் மேற்கொள்ளப்படுகிறது.முக்கிய ரெயில் நிலையங்களில் 'கியூஆர்கோடு' 'யு.பி.ஐ. செயலி' மூலம் முன்பதிவு  இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி | Tamil News Southern Railway to install 254  additional ...

ஓட்டல், டீ கடை, சிறிய பெட்டி கடைகளுக்கு கூட தற்போது யு.பி.ஐ.யை பயன்படுத்தி பணத்தை புழங்குவது அதிகரித்து வருகிறது. முன்பதிவு டிக்கெட் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி எடுப்பதுபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யு.பி.ஐ. மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தற்போது ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் ரீ சார்ஜ் வசதியுடன் இந்த வசதி பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் யு.பி.ஐ. செயலி மூலம் டிக்கெட் பெறுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. நீண்ட வரிசையில் காத்து நிற்பது, பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் பயணிகளுக்கு யு.பி.ஐ. செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்க முடியும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயணிகள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் யு.பி.ஐ. செயலி வழியாக டிக்கெட் பெற முடியும். தெற்கு ரெயில்வே 6 கோட்டங்களில் 254 தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் இந்த வசதியை மேம்படுத்துகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- தானியங்கி டிக்கெட் வாங்கும் எந்திரத்தில் உள்ள திரையில் பயணி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணத்தை யு.பி.ஐ. செயலி அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் எளிதாக செலுத்தலாம். இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்மார்ட் கார்டையும் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

புறநகர் மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய இந்த வசதியை பயன்படுத்தலாம். மொத்தம் உள்ள 254 எந்திரங்களில் சென்னை டிவிசனில் மட்டும் 96 எந்திரங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படுகிறது.

திருச்சியில் 12, மதுரை-46, சேலம்-12, திருவனந்தபுரம்-50, பாலக்கோடு டிவிசனில் 38 என அமைக்கப்படுகிறது. டிக்கெட் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரிண்ட் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Post

தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம்

Posted by - April 14, 2023 0
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்று  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும்…” – நயன்தாரா மறைமுக சாடல்

Posted by - January 11, 2025 0
தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும்,…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *