திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

206 0

ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்ததுதிருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து  கிடந்த புதுமணத் தம்பதி | Tamil News Chhattisgarh Newly married couple found  dead with stab wounds before wedding reception

அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதி தங்கள் வீட்டு அறையில் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச்சென்றார்.

உள்புறம் தாழிடப்பட்டிருந்த அந்த அறைக்கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவரும், மற்றவர்களும் அறை ஜன்னல் வழியே உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணமகனும், மணமகளும் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மணமகனும், மணமகளும் உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

புதுமண ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து ஒரு கத்தியையும் கைப்பற்றினர். ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக புதுமணத் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் மணமகளை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, மணமகன் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Post

கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - January 6, 2025 0
முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *