கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

207 0

முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நன் ஊட்டச்சத்தை தரும் உணவு வகைகளுள் மீன் குறிப்பிடத்தக்க உணவாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் கருவாடும் ஒரு ஆகச்சிறந்த உணவு வகைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.பொதுவாக வீட்டில் மீன் குழம்பு என்றாலும், கருவாடு குழம்பு என்றாலும் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு குழம்பு வைக்க தேவை இல்லை, காரணம் சுட வைத்து சுட வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிடலாம், அதிலும் கருவாடின் சுவை என்பது நாள் அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும், சரி அந்த வகையில் கருவாடு கடை எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
பொதுவாக கருவாடு என்பது உலர்த்தப்பட்ட மீன் அவ்வளவு தான், ஒரு உணவோ பண்டமோ மீனோ அதை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி உப்பிட்டு பதப்படுத்திடும் போது அதில் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவைகள் ஆக்கிரம்படாமல் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும், அப்படித் தான் கருவாடும், நீங்களாக தயாரிக்க போகிறீர்கள் என்றால் மீன்களை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.

பின்னர் வெட்டி உலர்த்தி உப்பு போட்டு பதப்படுத்தி, மீன் மார்க்கெட்டுகள் அல்லது ஏதாவது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடையாகவோ அல்லது தள்ளு வண்டிகள் மூலமாகவோ விற்கலாம், 10 ரூபாய் பாக்கெட்டுகள் போட்டு மொத்த கடைகளுக்கும் கொடுக்கலாம், ஒரு சிறிய கடுவாடு கடை வைக்க குறைந்தபட்சம் ஒரு 30000 முதலீடு கையில் இருந்தால் போதும்,

கட்டா பாறை, தேங்காய் பாறை, மஞ்சபாறை, கடல் விரால், சீலா, தேடு, சுறா, பால் சுறா, சூரை, பெரும்செல்லா, வாளை, விளமீன் மற்றும் வாவல் போன்ற மீன்களை தனித்தனியாக வெட்டி பதப்படுத்தி கருவாடு செய்ய வேண்டும், மொத்தமாக குழப்பி துண்டு கருவாடு செய்தால் அதன் சுவை மாறி விடும், தொழில் நன்கு பிக் அப் ஆகும் பட்சத்தில் மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்.

முறையான விற்பனைக்கான ஆவணங்கள், உணவு விற்பனைக்கான லைசென்ஸ், ஏற்றுமதிக்கான ஆவணம், GST எல்லாம் பதிவு செய்து வைத்து இருந்தால் வெளிநாடுகளுக்கும் உங்கள் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய முடியும், நீங்கள் முதலில் சிறியதாக சந்தைப்படுத்திவிட்டு உங்களுக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏற்றுமதி குறித்து யோசிக்கலாம்.

Related Post

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்

Posted by - August 28, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை…

வர்த்தகத்தை மூடும் அமேசான்.. இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி..?!

Posted by - November 29, 2022 0
உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மாபெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

Posted by - January 16, 2025 0
இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *