விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி

337 0

தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாத்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் பட வசூலை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசான திரைப்படம் வாத்தி. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். சித்தாரா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்திருந்த இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டது. இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீஸ் ஆனதுvaathi boxoffice collection : விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி...  பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷ் உடன் கென் கருணாஸ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி இப்படம் ரிலீசான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.51 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.Dhanush Vaathi movie first day box office collection in Tamil, தனுஷின் ' வாத்தி' படம்; முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | Indian Express Tamil

வாத்தி படம் தமிழை விட தெலுங்கில் தான் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டும், இங்கு ரூ.22 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டைவிட தெலுங்கு மாநிலங்களில் குறைவான அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இப்படம் அங்கு ரூ.21 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர வெளிநாடுகளில் மட்டும் இப்படம் ரூ.14 கோடி வசூலித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி தெலுங்கில் வாத்தி படம் மூலம் அதிகளவிலான ஷேர் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் முதல் வார இறுதியில் ரூ.12 கோடி ஷேர் கொடுத்துள்ளதாகவும், இது தனுஷின் முந்தைய படங்களைவிட 4 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் வெளியானபோது மொத்தமே ரூ.12 கோடி ஷேர் தான் கிடைத்திருந்ததாகவும், தற்போது வாத்தி படத்துக்கு ஒரே வாரத்தில் அந்த ஷேர் தொகை கிடைத்துள்ளதால், மிகுந்த உற்சாகம் அடைந்த தயாரிப்பாளர் படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி ஒன்றையும் கொடுத்துள்ளாராம்.

Related Post

ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

Posted by - January 17, 2025 0
விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின்…

ரசிகர்களுக்கு செம ட்ரீட்… வெளியானது AK62 டைட்டில்…

Posted by - May 1, 2023 0
அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.…

லோகேஷ் கனகராஜின் முதல் ஃப்ளாப் படமா கூலி ? ரசிகர்கள் விமர்சனங்கள் சொல்வது என்ன?

Posted by - August 14, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கூலி படத்தின் முதல் காட்சியின் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன #CoolieReview #Coolie #Review…

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *