லோகேஷ் கனகராஜின் முதல் ஃப்ளாப் படமா கூலி ? ரசிகர்கள் விமர்சனங்கள் சொல்வது என்ன?

86 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கூலி படத்தின் முதல் காட்சியின் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன

#CoolieReview

#Coolie #Review

கூலி விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஃப்ளாப் கொடுக்காத இயக்குநராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் படம் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெற்றது. அந்த வகையில் கூலி படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே வழங்கி வருகிறார்கள் . லோகேஷ் கனகராஜின் வெற்றிப் பயணம் தொடருமா? அல்லது தனது முதல் தோல்வியை சந்திக்க இருக்கிறாரா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

தொடருமா லோகேஷின் வெற்றிப்பயணம் ?

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைப் போல கூலி படத்திலும் அவரது தனித்துவமான டச் இருக்கவே செய்கின்றன. ரஜினிக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டைட்டில் கார்டு. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பது , இடைவேளைக் காட்சியில் விண்டேஜ் பாடல் வைத்து முடிப்பது என தனது தனித்துவமான அடையாளத்தை படத்தில் வைத்துள்ளார். நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அனிருத் காட்சிகளை தனது இசையால் உயர்த்துகிறார். ஆனால் கதையைப் பொறுத்தவரை படம் மிக வழக்கமான திருப்பங்களுடன் செல்கிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் குறைவான சுவாரஸ்யத்துடன் கூலி படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்

முதல் தோல்வியா ?

கூலி படத்திற்கு திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. இதனால் முதல் காட்சியின் விமர்சனங்களை வைத்து படம் வெற்றியா தோல்வியா என்பதை தீர்மாணிக்க முடியாது. மேலும் ஃபேமிலி ஆடியன்ஸ் முதல் அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்த பின்னரே அதை சொல்ல முடியும். மேலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது படத்தின் வசூல்தான். கூலி படத்தைப் பொறுத்தவரை அதற்கு வசூல் ரீதியாக மிக சிறப்பான ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்த ஓப்பனிங்கை படம் அடுத்தடுத்த நாட்களில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே கேள்வி.

Related Post

TN Film Awards: வராத படத்துக்கு விருது..!

Posted by - February 2, 2026 0
திரைக்கே வராத சண்டக்காரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டக்காரி திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதேஷ், தமிழ்நாடு அரசின்…

CINEMA NEWS:ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’ படம் – இந்திய சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

Posted by - February 29, 2024 0
மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில்…

அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

Posted by - August 5, 2023 0
கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறினார். அப்போதில் இருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார்…

பிப்ரவரியில் வெளியாகும் கவினின் ‘டாடா’திரைப்படம்

Posted by - January 25, 2023 0
கவின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில்…

2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - February 8, 2025 0
விடாமுயற்சி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்தின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *