இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 2, 2023 வியாழக்கிழமை.❤️

329 0

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 2, 2023 வியாழக்கிழமை.❤️

மேஷம்✅

உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகளின் அதிக சுமையால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்

ரிஷபம்✅

தொழிலுக்கு இருந்த இடையூறுகளை சாதுரியமாக களைவீர்கள். எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். . எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை பெற்று வங்கி சேமிப்பை உயர்த்துவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். குடும்ப சிக்கலை தீர்ப்பீர்கள்.

மிதுனம்✅

வியாபாரம் காரணமாக வெளியூரில் தங்குவீர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்து உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதலாக வேலை பார்ப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் அடைவீர்கள்.

கடகம்✅

திறமையான செயல்பாட்டால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் வீண் சலசலப்பை சந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலனை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனையை அதிகரிப்பீர்கள். எதிர்கால கல்வி பற்றிய கவலையில் மூழ்குவீர்கள்.

சிம்மம்✅

விழிப்புடன் இருந்து வியாபாரத்துக்கு வர இருந்த நஷ்டத்தை தவிர்ப்பீர்கள். சிலர் பதவி உயர்வோடு உத்தியோக இட மாற்றமும் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கம் அடைவீர்கள். வியாபாரம் நிதானமாக நடக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள். அரசுத் துறைகளில் பணி அழுத்தம் அதிகரித்து சிரமப்படுவீர்கள்.

கன்னி✅

அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் வெளி வட்டாரங்களில் நல்ல பெயர் எடுப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்த பிணக்குகளை விலக்குவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான ஏற்பாடு செய்வீர்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் நிதானமாகப் பேசி புரிய வைப்பீர்கள். தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று பணவரவை அதிகரிப்பீர்கள்

துலாம்✅

உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கியை வசூல் செய்வீர்கள். உடல் ரீதியான பாதிப்புக்கு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலக நிர்வாகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவீர்கள். கட்டுமானத்துறையில் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். விவசாயத் தொழிலில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். மின்சாரப் பொருட்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

விருச்சிகம்✅

வேலைகளை வேகமாக முடிக்க இயலாமல் பின்னடைவை சந்திப்பீர்கள். இனிமையாக பேசி கணவன் மனைவிக்கு இடையே இறுக்கத்தை அதிகரிப்பீர்கள். அலுவலகச் சுமையால் குடும்பத்தைவிட்டு அந்நியப்படுவீர்கள். அரசு வங்கியில் இருந்து எதிர்பார்த்த லோன் வர தாமதமாகும். வியாபாரம் சற்று மந்தமாக நடக்கும். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை

தனுசு✅

ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களை சந்தோஷப்படுத்த அக்கறையோடு நடந்து கொள்வீர்கள்.

மகரம்✅

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காதீர்கள். எடுத்த வேலையை முடிக்க அக்கறையோடு பாடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்பு பெறுவீர்கள். அலுவலக கடனுதவி பெற்று வீட்டை அழகுப்படுத்துவீர்கள். தோப்பு பராமரிப்பு பணியில் கவனத்தைச் செலுத்துவீர்கள். கட்டுமான வேலையை சிறப்பாக பார்ப்பீர்கள்.

கும்பம்✅

ஏஜென்சி சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல வருமானம் பெறுவீர்கள். நிலம் வாங்கி விற்பதன் மூலம் கணிசமான கமிஷன் கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். கதை கவிதை கட்டுரை இலக்கிய ஈடுபாடுகளை அதிகரிப்பீர்கள். வேலையில் திறமையாகச் செயல்படுவீர்கள்.

மீனம்✅

முயற்சியை முடுக்கிவிட்டு முன்னேற்றமான காரியங்களைப் பார்ப்பீர்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் அனுகூலமாக நடப்பதால் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் சமுதாயத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொண்டு உறவை பலப்படுத்துவீர்கள்.

 

Related Post

நோய் வரும்னு பயமா இருக்கா? அதுவே ஒரு நோய்தான்.. இப்படி ஒரு மன வியாதி இருப்பது தெரியுமா?

Posted by - December 18, 2023 0
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உடல்நலன் குறித்து சாமானிய மக்களிடமும் கூட அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும்…

ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

Posted by - November 16, 2023 0
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை

Posted by - March 7, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை❤️ மேஷம்✅ ஏதோ ஒரு மன கவலையால் இரவில் தூங்காமல் தவிப்பீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் கை…

மக்கள் மனதில் மாம்பழம்…….மாம்பழத்தின் பல்வேறு நன்மைகள்!

Posted by - April 18, 2024 0
மாம்பழம் நம் நாட்டின் தேசிய கனி, முக்கனிகளில் முதன்மையான ராஜா கனி மற்றும் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். பெரும்பாலும் கோடைகாலம் வந்தாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது…

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தோணுதா…? இந்த பிரச்சனைதான் காரணமாம்…

Posted by - September 18, 2024 0
காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது வயிறுதான்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *