நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்… இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

310 0

மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது, நாடு முழுவதும் H3N2 வைரஸ் பரவி பருவகால காய்ச்சல், சளி, இருமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம்.

பொதுவாக இந்த பருவ கால காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்படும். இந்த நோய் காற்று மாசு காரணமாக சுவாச தொற்றாக ஏற்படுகிறது. எனவே, பருவ கால சளி காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்து மாத்திரைகளை தர கூடாது.

எனவே, நோயாளிகள் Azithromycin and Amoxiclav இந்த பருவ கால வைரஸ் காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை. பல ஆன்டிபயாட்டிக்குகள் நோயாளிகளிடம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, 70 சதவீத டயரியா பாதிப்புகள் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.ஆனால் அவர்களுக்கு amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தவறாக பிரயோகம் செய்கிறார்கள். எனவே, மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Post

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி…

Posted by - June 25, 2025 0
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜீவானந்தம் வைத்த ட்விஸ்ட்.. நான்கு மருமகளிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் குணசேகரன்

Posted by - December 20, 2024 0
முடிந்து போன ஒரு சீரியலுக்கு இந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டுமே. யாருமே எதிர்பார்க்காத வகையில் அவசர…

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்- இந்திய சட்ட ஆணையம்

Posted by - July 4, 2023 0
சென்னை: திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அனைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *