10 நிமிடத்தில் செய்யலாம் மட்டன் மூளை மிளகு மசாலா

243 0

தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.ஆட்டு மூளை வறுவல் செய்வது எப்படி|Goat brain fry recipe in Tamil|moolai  varuval seivathu eppadi - YouTube

தேவையான பொருட்கள்

மட்டன் மூளை – 200 கிராம்

சின்ன வெங்காயம் – 5

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

தனியா தூள் – 2 டீஸ்பூன்

சீரக தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

* மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

* பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

* தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.

Related Post

பலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. ஷாக்கிங் தகவல் கூறிய பாடகி ஜோனிடா காந்தி

Posted by - June 17, 2025 0
ஜோனிடா காந்தி தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த காலத்தில் விரல்விடும் அளவிற்கு பாடகர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது கணக்கே இல்லாமல் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள்…

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

Posted by - August 14, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது. மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக்…

கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா

Posted by - December 20, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள். பல்வேறு…

ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Posted by - May 18, 2023 0
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா…

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - February 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *