தினசரி பாதிப்பு 796-ஆக உயர்வு: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

236 0

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு நேற்று 700-ஐ தாண்டியிருந்தது. நேற்று ஒரே நாளில் 754 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது.தினசரி பாதிப்பு 796-ஆக உயர்வு: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5  ஆயிரத்தை தாண்டியது | Tamil News 796 corona positive cases across india

இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை யிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 226 பேர், குஜராத்தில் 119 பேர், கேரளாவில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து உள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 388 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவர்கள் எண்ணிக்கை 5,026 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 403 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், புதுச்சேரியில் தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,795 ஆக உயர்ந்துள்ளது.

Related Post

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

Posted by - July 1, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி. உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு…

கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

Posted by - February 29, 2024 0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி…

டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைப்பு: வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது

Posted by - August 9, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது…

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted by - October 30, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *