அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

239 0

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்  பரபரப்பான வாதங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி, உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர், தகுதி நீக்கம் செய்து விட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இடைக்கால பொதுச் செயலாளரை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லாது எனவும் கட்சிக்குள் எடுக்கும் முடிவுகள் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல என்றும் வாதிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக, தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் கட்சி அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட தயார் எனவும், கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், வழக்கை திரும்பப் பெற தயார் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தனர். திமுகவை எதிர்கொள்ள வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பதவிகள் ரத்து செய்யப்பட்டதே தவிர அவை காலாவதியாகவில்லை என்றும், ஓபிஎஸ் தான் தனக்கென தனி கட்சியை நடத்தி, நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் வாதிடப்பட்டது. உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உள்ளது என வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு,

பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் தன்னுடைய சொந்த தம்பியை எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியை விட்டு நீக்கியவர் தான் ஓ.பி.எஸ் என நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர்.

அதிமுக பொதுக்குழுவின் முடிவே இறுதியானது என்றும் இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என்றும் ஈபிஎஸ் தரப்பு குறிப்பிட்டது. ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அன்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் செல்லும் எனவும் ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றது.

இதையடுத்து நீதிபதி குமரேஷ் பாபு, இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Post

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

“இது வெறும் தேர்தல் களமல்ல… அறப் போர்க்களம்!” — முதல்வர் ஸ்டாலின்

Posted by - March 21, 2024 0
சென்னை: “இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

நீண்ட இழுபறிக்கு பின் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Posted by - March 27, 2024 0
மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர்…

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *