நீண்ட இழுபறிக்கு பின் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

204 0

மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா போட்டியிடுவார் அகில இந்திய காங்கரஸ் கட்சிஅ அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. இதில் 8 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில், தொடர் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் நேற்று அறிவிக்கப்பட்டார். ஆனால், மயிலாடுதுறை வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இழுபறிக்கு காரணம் இதுதானா?

மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது. இதேபோன்று கடந்த முறை திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சு. திருநாவுக்கரசர், செல்லக்குமார் ஆகியோரும் இந்த தொகுதிகளை ஒதுக்க கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. இதனால், வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில்,
மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் இன்றாவது அறிவிப்பார்களா? என கேள்வி எழுந்தது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியை வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், டெல்லியில் வசித்து வருவதால் உள்ளூரை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரவீன் சக்கவர்த்தியை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தலைமை முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி வழக்கறிஞர் சுதா தற்போது வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில்,  அதிமுக  சார்பில்   பாபு , பாமக சார்பில் ம.க.ஸ்டாலினை எதிர்த்து  வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்

Related Post

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்

Posted by - March 8, 2025 0
மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை போலீசார் கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - April 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - January 8, 2026 0
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *