Actor Vijay : 10, +2 மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கும் விழா குறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது.
அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை அவர் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடிகர் விஜய் 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகிறார். மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் காலை 7.45 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு விருந்தளிக்கிறார் நடிகர் விஜய்.இந்த விழாவுக்காக விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் 10, +2 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவிற்கு பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.