கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

286 0

பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது.பச்சை பயறு குழம்பு | Delicious Green Gram Curry | பச்சை பயறு குழம்பு -  Tamil BoldSky

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பச்சை பயறு – 1/2 கப்

தக்காளி – 1

சின்ன வெங்காயம் – 50 கிராம்

பூண்டு – 3 பல்

புளி – 1 எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முளைகட்டிய பச்சை பயறை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி மசித்து கொள்ளவும்.

புளியை 2 கப் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

பின்பு அதில் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும். குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை லேசாக மசித்துப் போட்டு, மீண்டும் 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். புளி சேர்க்காமலும் இந்த குழப்பை செய்யலாம். சூப்பராக இருக்கும்.

Related Post

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா! ரசிகர்களுக்காக செய்த விஷயம்

Posted by - April 1, 2023 0
ராஷ்மிகா இந்த வருடத்தின் ஐபிஎல் சீசன் இன்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில்…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்.!

Posted by - April 12, 2024 0
வெப்ப அலை தொடர்பான நோய்கள் என்பவை கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருக்க நேரிடுவதால் ஏற்படும் பல நிலைகளை உள்ளடக்கியது. கடுமையாக வியர்ப்பது, பலவீனம், குமட்டல் மற்றும்…

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா! 50 லட்சமும் இவருக்கு தானா..

Posted by - December 25, 2023 0
பிக் பாஸ் 7 85 நாட்களை பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இதில் யார் அந்த வெற்றி கோப்பையை கைப்பற்ற போகிறார் என ஆர்வத்துடன்…

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

Posted by - September 16, 2023 0
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *