திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

223 0

தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக தமிழ்நாடு மதுபானம் விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த சிறப்பு உரிமம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் உரிமக் கட்டணம் செலுத்திய பிறகு ஆட்சியர் ஒப்புதலுடன் சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உரிமம் பெற்றவர் மாநகர காவல் ஆணையரிடம் ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உரிமம் பெற்றவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விருந்தினருக்கு பரிமாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - July 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

உங்க வயித்துல ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப அது ஆபத்தான வயிற்று புற்றுநோயா இருக்கலாமாம்..!

Posted by - November 10, 2023 0
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

Posted by - November 29, 2022 0
துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி சந்திப்பு. தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

Posted by - January 6, 2026 0
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *