தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

196 0

புதுடெல்லி:

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர்.

அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை போல போலியான ஆதார் அட்டை தயாரித்து சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் போலி அடையாள அட்டை தயாரித்து வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்த கும்பலை கைது செய்ய என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்

இதேபோல் புதுச்சேரி, திரிபுரா, காஷ்மீர், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம், தெலுங்கானா, அரியானா மற்றும் ராஜஸ்தான் என மொத்தம் 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று ஒரே நாளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த சோதனையின்போது அதிகாரிகளுடன், அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வேலை பார்த்து வந்த சகாபுதீன் (வயது 28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த அவர், போலி ஆதார் அட்டை மூலம் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இவர் கடந்த சில மாதங்களாக அதே கடையின் மாடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 பேர் நேற்று காலை ஒரு வீட்டில் திடீரென சோதனையில் இறங்கினர். அப்போது அங்கு தங்கியிருந்த முன்னா, மியான் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த முன்னா திரிபுரா மாநிலத்தில் வசிப்பது போல ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளை போலியாக தயாரித்து வைத்திருந்ததும், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னாவை கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வங்காளதேச நபரின் புகைப்படத்தை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காண்பித்து அந்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால் வங்காளதேச நபர் தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்காததால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

அதேபோல் பல்லடம் அறிவொளிநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பெயர் பதிவு கொண்ட பட்டியலை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் தேடி வந்த வங்காளதேச நபர் சில மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வங்காளதேசம் சென்று விட்டாரா? அல்லது வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறாரா? என்று அதிகாரிகள் விசாரித

Related Post

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

Posted by - September 7, 2023 0
திருமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை…

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்…

Posted by - December 6, 2023 0
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை…

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

Posted by - December 15, 2023 0
சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு…

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Posted by - April 24, 2024 0
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *