உதயநிதி அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? – அண்ணாமலை கேள்வி

246 0

முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் வரவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விளக்கம் தரப்படுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்லல் குழும விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்த சுமார் 34 லட்சம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக சொத்து பட்டியல் வெளியிட்டபோதே நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியதாகவும், முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளதாகவும் அண்ணாமலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருவதாகவும், இரு நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து பதில் அளிக்கப்படுமா எனவும் அண்ணாமலை வினவியுள்ளார்.

Related Post

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் – மயிலாடுதுறையில் பரபரப்பு…!

Posted by - July 16, 2025 0
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ போது மனு கொடுக்க காவல்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த நிலையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு…

அக்கு அக்கா உடையுதா முடி.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. கருகருன்னு தலைமுடி வளர்ச்சிக்கு மாஸ் டிப்ஸ்

Posted by - December 15, 2023 0
சென்னை: இன்றைய நவீன சூழலில், தலைமுடி கொட்டுவதும், பலவீமான தலைமுடியும், மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *