தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்…? ஷாக்கில் பொதுமக்கள்..!

380 0

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.

புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், வரும் 2026-27ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்க அளவின் அடிப்படையில் மின் கட்டணத்தை 4 புள்ளி 70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

#BreakingNews‌ | காவலர் – நடத்துநர் சமாதானம்

Posted by - May 25, 2024 0
நாங்குநேரியில் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் சமாதானம்! #Tirunelveli #Nanguneri #Police #Conductor #TNpolice | #Transportdepartment | #Trafficpolice…

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Posted by - March 5, 2024 0
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு…

போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது – சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் முற்றுகை

Posted by - December 31, 2025 0
சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை…

கும்பகோணம் சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?

Posted by - October 8, 2025 0
சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?  சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *