அதைப்பற்றி பேசினால் விஜய் திட்டுவார்… வெங்கட்பிரபு ஓபன் டாக்!

208 0

நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் 68 படத்தை பற்றி பேசினால் விஜய் திட்டுவார் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – யுவன் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது.சுனைனா நடித்துள்ள ரெஜினா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு, மேடையில் படத்தை பற்றி பேசினார். அதன் இறுதியில், அவர் அடுத்து இயக்கவுள்ள விஜய் 68 படத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, விஜய் 68 திரைப்படத்தை பற்றி இப்போது பேசினால் விஜய் திட்டுவார். லியோ திரைப்படம் வந்த பிறகு, அதை பற்றி பேசலாம் என்று வெங்கட் பிரபு கேட்டுகொண்டார்.

லியோ திரைப்படத்தை முடித்த பிறகு, நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய் 68 திரைப்படம் குறித்து லியோ வெளியீட்டுக்கு பின் பேசலாம் என வெங்கட் பிரபு தொடர்ந்து கூறி வருகிறார்.

Related Post

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா?

Posted by - February 24, 2026 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் கலைஞர் தான் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால்…

கர்ப்பத்தை க்யூட்டாக அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!!

Posted by - March 18, 2024 0
பிரபல சின்னத்திரை நடிகையான ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதையே செம க்யூட்டாக அறிவித்துள்ளார். பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில்…

ரிலீஸுக்கு முன் முதல் நாள் ஜெயிலர் செய்த வசூல் சாதனை.. இத்தனை கோடியா

Posted by - August 7, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன்,…

12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து சூர்யா.. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்

Posted by - February 25, 2025 0
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சூர்யா நடிப்பில்…

மதுவால் எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்- மனிஷா கொய்ராலா உருக்கம்

Posted by - July 19, 2023 0
நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *