ஒடிசா ரெயில் விபத்து.. பிணவறையில் உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு!

210 0

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளி கிழமை இரவு நடந்த கோர விபத்தில், மறுநாளான சனிக்கிழமை மாலை வரை மீட்பு பணிகள் நடைபெற்றன. பின் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் துவங்கின. இதனிடையே உயிரிழந்தோர் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தன.அந்த 20 நிமிடம்தான் இந்தியாவையே உலுக்க போகிறது.. உலக நாடுகளை குழப்பிய ஒடிசா  ரயில் விபத்து டைம்லைன்! | Why this time line of Odisha train accident  confuses people and ...

அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை மீட்பு படையினர் ஆய்வுக்காக எடுக்க சென்றனர். உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையினர் காலை திடீரென யாரோ பிடித்துள்ளனர்.

சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் அடைக்கப்பட்டிருந்துள்ளார். உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது. சடலங்கள் மட்டுமே வைக்கப்பட்ட அறையில் மீட்பு படையினர் காலை உயிர்பிழைந்தவர் பிடித்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மெல்ல விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ந்த மீட்பு படையினர், மெல்ல உயிர்பிழைத்த நபர் அங்கிருந்து நகர முடியாமல் இருப்பதை பார்த்து அவருக்கு உதவினார். பிறகு மீட்பு படையினர் உயிர்பிழைத்த ராபினை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்தில் கால்களை இழந்த ராபின் உயிர்பிழைத்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Post

இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

Posted by - March 13, 2025 0
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்..

Posted by - August 2, 2024 0
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், கஸ்டமர்களுக்கு உரிய நேரத்தில் சலுகைகளை கொடுப்பதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *