விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்

261 0

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது.விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட  அதிசயம் | Tamil News plane crash in colombia miraculously 4 children  survived after 40 days

இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார். இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபற்றி கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறும்போது, இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர்.

அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் என கூறியுள்ளார். விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Post

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?

Posted by - July 6, 2023 0
நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும்…

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

Posted by - January 6, 2024 0
வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது.…

வெளியானது ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Posted by - February 13, 2025 0
சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன. ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். 1995ஆம் ஆண்டு முதல்…

ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்

Posted by - April 15, 2023 0
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது…

90 சதவீதம் காலி.. ரஷியா ராணுவம் பற்றி அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல்..

Posted by - December 13, 2023 0
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *