தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

355 0

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர் சென்னையில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே அப்துல் காதர் இறந்து விட்டார். இதையடுத்து ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்ததோடு இல்லாமல் குழந்தைகள் அனைவரையும் நல்லப்படியாக படிக்க வைத்தார்.

அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்தினார். அவரது ஒரே மகனான அம்ருதீன் ஷேக் தாவூத் பட்டப்படிப்பு முடித்து கொண்டு சென்னையில் தொழிலபதிராக உள்ளார். அவர் உயர்ந்த நிலையை அடைய ஜெய்லானி பீவி செய்த தியாகம் ஏராளம். கஷ்டப்பட்டு பிள்ளைகளை அவர் வளர்க்கபட்டபாட்டை விவரிக்க வார்த்தைகள் இல்லைதிருவாரூர் அருகே மகன் கட்டிய நினைவு இல்லம் - ரூ.5 கோடியில் தாய்க்கு ஒரு  தாஜ்மஹால் | son built a Taj Mahal for the mother at Rs 5 crore near  Tiruvarur - hindutamil.in

இதனால் ஜெய்லானி பீவியின் மீது மகன் அம்ருதீன் ஷேக் தாவூத் மற்றும் மகள்கள் அனைவரும் மிகவும் பாசமாக இருந்தனர். மேலும் அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது தாயின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். தாயின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. அப்போது இறந்த தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு நினைவுச்சின்னத்தை சொந்த ஊரான அம்மையப்பன் கிராமத்திலேயே தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்தார். தொடர்ந்து நினைவு இல்லம் கட்டுமான பணிகள் தொடங்கி வேகமெடுத்தன. ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கிய பணி முடிவடைந்தது. ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் தயாரானது. நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்று பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு இல்லத்தை எம்மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். 5 வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது.

இதில் தற்போது 10 மாணவ- மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் 1000 பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் இவ்வுலகில் காலம் காலமாக பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நினைவு இல்லத்தை ஏராளமானோர் பார்த்து செல்லும் போது இன்னும் தன்னுடன் தாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அம்ருதீன் ஷேக் தாவூத் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Post

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

Posted by - September 3, 2024 0
தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இழப்பீடு வழங்கவும் மனமில்லை!- இபிஎஸ்

Posted by - July 14, 2025 0
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில்…

ஆடியோ லான்ச் முக்கியமே இல்லைன்னு விஜய் போட்ட முட்டுக்கட்டை..

Posted by - August 9, 2024 0
எப்பொழுதுமே விஜய் புது படங்களின் ஆடியோ லான்ச் திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால் கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் வேண்டாம் என்று விஜய்யே இந்த முறை முட்டுக்கட்டை…

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *