அதிதீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

221 0

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதிதீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3  மாநிலங்களுக்கு எச்சரிக்கை | Cyclone Biparjoy To Intensify In Next 24 Hours  3 States On Alert

தற்போது இந்த புயல் கோவாவின் மேற்கு திசையில் 690 கி.மீட்டர் தூரத்திலும், மும்பையில் இருநது 640 கி.மீட்டர் மேற்கு- தென்மேற்கு திசையிலும், போர்பந்தரில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 640 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது. தற்போது 145 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகன மழை மற்றும் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல திதால் கடற்கரை முன்எச்சரிக்கை காரணமாக ஜூலை 14-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. ஞாயிறு (நாளை) அல்லது திங்கிட்கிழமை குஜராத்தின் தெற்குபகுதியை அடைய வாய்ப்புள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளையும் துரிதமாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுவார்கள் என சூரத் கலெக்டர் தெரிவித்துள்ளார். புயலுக்கு வங்காளதேசம் இந்த பெயரை சூட்டியுள்ளது. இதற்கு பெங்காலில் பேரழிவு என்பது பொருள். கடந்த 2020-ல் இருந்து புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

Related Post

மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

Posted by - July 3, 2023 0
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால்…

TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?

Posted by - March 14, 2026 0
டிவிஎஸ் தனது புதிய இ ஸ்கூட்டர் TVS Orbiter 1-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரிக்கு சந்தா செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள்…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *