தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

188 0

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன.

போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. விடியா திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது.

இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது. வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

Posted by - March 8, 2024 0
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.…

மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

Posted by - February 24, 2023 0
கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம். புராணங்களில் பல விஷயங்கள்…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

ஏசி வாங்க பட்ஜெட் இல்லையா? கோடையை சமாளிக்க குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஏசிக்களின் பட்டியல் இதோ.

Posted by - May 2, 2024 0
MarQ FKAC103SFAA  : இந்த ஏசியின் விலை வெறும் 18,888 மட்டுமே. இந்த 3 ஸ்டார் ரேட்டட் ஏசிக்கு 230 வி 50 ஹெர்ட்ஸ் மின்சாரம் தேவைப்படும். இந்த…

ஒரு மாதம் டீ குடிப்பதை தவிர்த்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Posted by - March 15, 2024 0
ஒருவேளை உங்கள் டயட்டிலிருந்து டீயை முற்றிலுமாக நீக்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால், நீங்கள் டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *