போதை ஏறிப்போச்சு…புத்தி மாறிப்போச்சு… மது மயக்கத்தில் சொந்த கார், பணம், மொபைலை பறிகொடுத்த வாலிபர்

211 0

புதுடெல்லி:

மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு…புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் அமித்பிரகாஷ்(வயது30). இவர் தனியார் துறையில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு கோல்ப் கோர்ஸ் சாலையில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு பாரில் அமர்ந்து மது குடித்தார். அப்போது ரூ.2 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தார். உடனே மதுக்கடை உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு ரூ.2 ஆயிரம் போக மீத 18 ஆயிரம் ரூபாயை அவரிடம் திருப்பி கொடுத்தார்.போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு... மது மயக்கத்தில் சொந்த கார், பணம், மொபைலை  பறிகொடுத்த வாலிபர் | Tamil News teenager who stole his own car, money and mobile  phone ...

பின்பு கூடுதல் மது வாங்கிகொண்டு வந்த அமித்பிரகாஷ் வெளியில் வந்ததும் தனது காரில் இருந்தபடி மது குடித்தார். சற்று அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்ததால் போதை அதிகமானது. இந்த வேளையில் அங்கு வந்த மர்ம நபர் அமித் பிரகாசிடம் வந்து நானும் சேர்ந்து மது குடிக்கலாமா என்றார்.

உச்ச போதையில் இருந்த அமித்பிரகாஷ் சரி என தலை ஆட்டியதோடு மதுவை ஊற்றியும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் அமித்பிரகாசிடம் ‘டேய் என்னுடைய காரில் இருந்து மது குடிக்கிறாயா…இறங்குடா’ என்று கூறியுள்ளார். அதிக போதையில் இருந்த அமித்பிரகாஷ் அது தனது கார் என்பதை மறந்து போதையில் மயங்கி இருந்தார்.

இந்த வேளையில் மர்ம நபர் கூறியதால் காரை விட்டு இறங்கிய அவர் வாடகை கார் பிடித்து வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.

மறுநாள் அதிகாலையில் விழித்ததும் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது. உச்ச போதையில் தனது காரை இழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அந்த காரில் அமித்பிரகாசுக்கு சொந்தமான லேப் டாப், பர்சில் ரூ.18 ஆயிரம், மொபைல் போன் போன்றவையும் இருந்தன. காருடன் அவற்றை மர்ம நபர் ஓட்டி சென்றுவிட்டார்.

அதிக போதையில் காரையும் உடமைகளையும் பறிகொடுத்த அமித்பிரகாஷ் போதை தெளிந்த நிலையில் தான் வசமாக ஏமாந்து போனதை உணர்ந்த பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Related Post

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

அதள பாதாளத்தில் பங்குச் சந்தை.. மாஸ் காட்டிய ஐடி பங்குகள்!

Posted by - August 3, 2024 0
மிகவும் மோசமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்று பங்குச் சந்தை பெரிய சரிவை செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ்-நிஃப்டி ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமாக சரிந்தன. ஐடி மற்றும்…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - February 2, 2024 0
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr —…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு

Posted by - August 28, 2024 0
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *