பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

225 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர்.நிதி நிறுவனம் நடத்தி கூடுதல் வட்டி தருவதாக மோசடி செய்த கும்பல் | complaint  against Fraud gang in police

அங்குள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Post

உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனை

Posted by - July 8, 2023 0
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1…

Air India’s Biggest Mistake! ✈️ டெல்லி To கனடா.. ஆனா நடந்தது வேற! 🛑

Posted by - March 21, 2026 0
டெல்லியிலிருந்து கனடாவுக்கு (Vancouver) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், சுமார் 4 மணிநேரம் பறந்து சீனா வான்வெளி வரை சென்ற நிலையில், திடீரென டெல்லிக்கே திரும்பியது…

சராசரி மக்களுக்கு ஏற்ற மலிவு கார் எது?

Posted by - January 6, 2026 0
இந்தியாவில் தற்போது கிடைக்கும் குறைந்த விலை Top 5 கார்கள் – முழு விவரம் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் பட்ஜெட்…

30 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானம்- 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

Posted by - August 2, 2023 0
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *