கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

318 0

தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை பெய்தது.

இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகளிலும் நீர்மட்டம் ஜெட்வேகத்தில் உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்டு தடுப்பணையை அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை காரணமாக திறந்து விட்டது. இதனால் டெல்லி மாநிலத்தில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.கனமழை! தத்தளிக்கும் டெல்லி.. யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..  மக்களுக்கு வார்னிங் கொடுத்த அரசு | Delhi Issued Flood Warning As Haryana  released more than one lakh ...

நேற்று மாலை 205.33 மீட்டரை தாண்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய ரெயில் பாலம் அருகில் 206.28 மீட்டரை தாண்டியது. இன்று மதியம் 206.65 மீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் ”வெள்ள அபாயம் மோசமான நிலையில்தான் உள்ளது. ஆனால், அரசு எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது. 206 மீட்டரை தாண்டும்போது மக்களை வெளியேற்றும் பணி தொடரும்” என்றார். கிழக்கு டெல்லியின் சில இடங்களில் நேற்றிரவில் இருந்து அதிகாரிகள் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

அதிகாரி ஒருவர் ”பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் மட்டும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்றார். ஹரியானா மாநிலம் 3 லட்சம் கனஅடி நீரை திறந்து விடுவதால் யமுனை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 352 கனஅடி நீர்தான திறந்து விடப்படும். தற்போது அதிகமாக திறந்து விடப்ப்டுள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டெல்லியை வந்தடையும்.

ஏற்கனவே, வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 16 கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து கண்காணித்து வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியது யமுனை ஆறு.

டெல்லியில் சுமார் 41 ஆயிரம் மக்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருகிறார்கள். யமுனை ஆற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் அளவு (206.38) அபாயம் கட்டத்தை எட்டியது. 2019-ல் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ந்தேதிகளில் 8.28 லட்சம் கனஅடி நீர் வரத்தால் 206.6 மீட்டர் அளவை எட்டியது. 2013-ல் 207.32 மீட்டரை தொட்டது.

Related Post

45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

Posted by - July 31, 2023 0
சித்தூர்: எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

டாடா சியாரால EV வந்தா நல்லா இருக்கும்னு வெயிட் பண்றீங்களா.?

Posted by - February 14, 2026 0
புதிய டாடா சியரா EV, வலுவான தோற்றம், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் மற்றும் நம்பகமான பிராண் பெயரைக் கொண்ட மின்சார SUV-யைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Posted by - December 11, 2025 0
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *