ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

349 0

சென்னை:

சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ வகை-2 (முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய்) என்ற அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை பாதிப்பு இருக்கும் குழந்தைகளால் யாருடைய ஆதரவும் இல்லாமல் உட்காரவோ, நடக்கவோ முடியாது.அரிய வகை நோய் Spinal Muscular Atrophy: கோயம்புத்தூர் குழந்தைக்கு கிடைத்த ரூ.16  கோடி மதிப்பிலான ஊசி - BBC News தமிழ்

நரம்பு மண்டல செல்களும் அழிந்துகொண்டே வரும். சுவாச தசை பலவீனம் அடைந்து சுவாசிப்பதிலும் பிரச்சினை ஏற்படும். இதுபற்றி தெரியவந்ததும் ஆகாஷ் மிஸ்ரா குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படியாவது அந்த நோயின் பிடியில் இருந்து தங்களது குட்டி தேவதையை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஸ்பத்திரிக்கு, சிவான்ஷியை சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, ‘இந்த அரிய நோயை குணப்படுத்த ‘சோல்கென்ஸ்மா’ என்று அழைக்கப்படும் மரபணு சிகிச்சை அவசியம். இதற்கான உயிர்காக்கும் மருந்தின் விலை ரூ.17½ கோடியாகும். அமெரிக்காவில் இருந்து வரவழைத்தால் சிகிச்சை அளிக்கலாம்’ என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐ.டி. நிறுவன ஊழியரான ஆகாஷ் மிஸ்ராவுக்கு ரூ.17½ கோடி என்பது இமாலய தொகையாகும். தனது வீடு, சொத்து என எதை விற்றாலும் அவரால் இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து அவர் பலரின் உதவியையும் நாடி வருகிறார். “தமிழக அரசு, தனிநபர், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் இணைந்து கருணை வடிவிலான உதவிகளை செய்தால் மட்டுமே எங்கள் குழந்தை மறுவாழ்வு பெறுவாள்” என்று ஆகாஷ் மிஸ்ரா உருக்கமாக வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Related Post

கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன? எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி பரவும் ஆபத்து

Posted by - September 7, 2023 0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள். அந்த…

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி…

Posted by - March 26, 2025 0
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு டென்ஷனான நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என்பதுபோல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *