கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி…

201 0

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு டென்ஷனான நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என்பதுபோல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு, இப்போது என்ன தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதாக என கேட்டு டென்ஷனானார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கூட்டணி குறித்து என்ன கூறினார் இபிஎஸ்.?

டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள், இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மட்டுமே பேசி, கோரிக்கை மனுவை அளித்ததாக, இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அரசியல் குறித்து என்ன பேசினீர்கள் என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்னைகள் தொடர்பாக மட்டுமே பேசியதாகவும், அரசியல் பேசவில்லை என்றும், கழுவும் மீனில் நழுவும் மீனாக பதிலளித்தார்.

ஆனாலும் விடாத மற்றொரு நிருபர், அப்படியானால் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, “ஏங்க, இல்ல..இருக்குதுன்னு… இப்ப என்ன எலெக்ஷனா நடக்குது.?“ என டென்ஷன் ஆனார். தொடர்ந்து, கடந்த இரண்டு முறையும் தேர்தல் நேரத்தில்தானே கூட்டணி குறித்து பேசினோம், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதா.?, எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறினார்.

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என சூசகமாக கூறிய இபிஎஸ்

மேலும், கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.. எங்கள் கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும், ஆனால் தேர்தல் நேரத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும் என பதிலளித்தார். அதோடு, தேர்தல் கூட்டணி என்பது, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் என்று கூறியதோடு, திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் அங்கேயே இருக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

இதனால், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்பதை அவர் சூசகமாகவே தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை கடைசி வரை அவர் கூறவே இல்லை. இதனால், அவர் அமித் ஷாவிடம் நிச்சயம் கூட்டணி குறித்தும் பேசியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

Related Post

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை…

டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: 4 நாட்களில் 79 ஆசிரியர்கள் மயக்கம் ..

Posted by - December 30, 2022 0
போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை: சம…

ஜப்பானிய வாட்டர் தெரபி என்றால் என்ன? ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமாம்…!

Posted by - December 6, 2023 0
தினமும் காலையில் எழுந்தவுடன் பல கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஜப்பானிய நீர் சிகிச்சையின் ஒரு அங்கமாகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால்,…

மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

Posted by - February 24, 2023 0
கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம். புராணங்களில் பல விஷயங்கள்…

மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

Posted by - December 2, 2023 0
சென்னை: மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? 2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *