ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு: இந்தியாவில் புற்றுநோய்க்கு 8 லட்சம் பேர் பலி

349 0

புதுடெல்லி :

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்குகிறது. புற்றுநோய், மேற்படி திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். புற்றுநோய் தடுப்புக்கான உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்பகால நோயறிதல் போன்றவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. சிகிச்சைக்காக நோயாளிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும்.. 15ல் ஒருவர் உயிரிழப்பார்..  உலக சுகாதார அமைப்பு | one in 10 Indians will develop cancer during their  lifetime and one in 15 will ...

இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் அந்த பதிலுடன், கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அளித்துள்ளார். அதன்படி, நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இது 2021-ம் ஆண்டு 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆக அதிகரித்து, 2022-ம் ஆண்டு 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது. அதைப்போல புற்றுநோய் இறப்புகளை எடுத்துக்கொண்டால் 2020-ம் ஆண்டு 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021-ம் ஆண்டு 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022-ம் ஆண்டு 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் இறந்துள்ளனர்.

புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 93 ஆயிரத்து 536 பேருக்கு பாதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புற்றுநோய் இறப்பிலும் உத்தரபிரதேசம் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 50 ஆயிரத்து 841 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.. ஜனாதிபதி உரை

Posted by - January 31, 2023 0
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். பாராளுமன்றத்தில்…

அதிமுகவில் மீண்டும் வெடிக்குமா உட்கட்சி பூசல்… முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு…

Posted by - February 12, 2025 0
அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால், மீண்டும் உட்கட்சி பூசல் வெடிக்குமா என்ற…

சிபில் ஸ்கோர் தேவையே இல்லை..Dont Worry! கடன் பெற சிறந்த வழிகள் இதோ..!!

Posted by - December 11, 2024 0
உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் அடிப்படையில் மாறுபடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.…

இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

Posted by - May 11, 2024 0
பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *