கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தையை மூச்சு திணறவைத்து கொடூரமாக கொன்ற பெண்

238 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலி (வயது 40). இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஜூலி தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலிக்கு வேறொருடருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் ஜூலி கர்ப்பமானார். கணவர் இறந்து 12 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கள்ளக்காதலனால் தான் கர்ப்பமானதை, கள்ளக்காதலை போன்று ஜூலி யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார். நாட்கள் செல்லச்செல்ல அவரது வயிறு பெரிதாக தொடங்கியது.பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை பலி.. மூச்சுத்திணறலா? பெண் சிசு  கொலையா? போலீஸ் விசாரணை | A two months female baby died after she drank  mother feed in Korukupet ...

அதன்பிறகும் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும தெரிவிக்கவில்லை. அவர் ரகசியமாக மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதித்தபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார். ஆகவே அவர் அந்த குழந்தையை கொலை செய்து புதைத்துவிட திட்டமிட்டார். அதன்படி அங்குள்ள கடற்கரைக்கு பிறந்த குழந்தையை எடுத்துச்சென்றிருக்கிறார். அங்கு குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்தார். குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேளே இந்த கொடூர செயலில் ஜூலி ஈடுபட்டுள்ளார். கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடற்கரையில் ஜூலி புதைத்த குழந்தையின் உடல் வெளியே வந்துவிட்டது. நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியபடி இருந்தன. இதனைப்பார்த்த சிலர் குழந்தை பிணம் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை மூச்சை திணறடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. குழந்தையை கொன்றது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கை யில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தான், ஜூலிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததை போலீ சார் கண்டறிந்தனர். இதை யடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தனக்கு குழந்தையே பிறக்க வில்லை, அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஜூலி வீடு உள்ள பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜூலி கர்ப்பமாக இருந்ததும், அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை தெரிவித்து ஜூலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனக்கு குழந்ைதை பிறந்ததையும், அதனை மூச்சு திணறடித்து கொன்று கடற்கரையில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜூலியை போலீசார் கைது செய்தனர்.

கணவர் இறந்து விதவை யாக வாழ்ந்து வந்தநிலையில், கள்ளக்காதலன் மூலம் கருவுற்று குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தன்னை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால், கர்ப்பமானதையும், குழந்தை பெற்றதையும் மறைத்துவிட்டதாகவும், பெற்ற குழந்தையை பிறந்த சிறிது நேரத்தி லேயே கொன்று புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் ஜூலி தெரிவித்திருக்கிறார். கள்ளக்காதலன் மூலம் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கொடுரமாக கொன்று புதைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

விளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவிளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்வில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

Posted by - February 1, 2025 0
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?   எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம்…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

14 பேரில் யாரை திருமணம் செய்யலாம்?- விவாதத்தை ஏற்படுத்திய பட்டதாரி பெண்ணின் டுவிட்டர் பதிவு

Posted by - July 19, 2023 0
மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி…

157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை – அதிர்ச்சியளித்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Posted by - May 29, 2023 0
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *